புதினங்களின் சங்கமம்

மீண்டும் ஊரடங்கா இல்லையா? தெளிவுபடுத்தினார் அஜித்ரோகன!!

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 300 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு சூழ்நிலை உருவாகுமா எனும் அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது. எனினும், அவ்வாறு எந்த எண்ணமும் இல்லையென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கிறார்

கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட தொற்று வெலிசர கடற்படை முகாமில் ஏற்பட்டது போன்ற நிகழ்வெனவே தற்சமயம் விளக்கமளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும் .

இந்நிலையில் கொரோனா ஆபத்து இன்னமும் குறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லாத பட்சத்தில், பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனவும் அஜித் ரோஹன எச்சரித்துள்ளமையும் சமூக மட்டத்திலான பி.சி.ஆர் பரிசோதனைகளை நடாத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.