சாமத்தியப்படாத பொம்பிளைப்பிள்ளைக்கு சாமத்தியச் சடங்கு!! யாழில் ரியூசன் சென்றர்களின் திருவிளையாடல்!!
இன்று ஓ.எல் பரீட்சை ஆரம்பமாகி யாழ் நகரப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் பரீட்சை எழுதச் சென்று கொண்டிருந்தார்கள். அந் நேரத்தில் பொருளியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப பிரிவு (TECHNO WORLD) என்ற பெயரில் இயங்கும் தனியார் ரியூசன்களை நடாத்துபவர்கள் குறிப்பிட்ட சில முக்கிய பாடசாலைகளின் வாசலில் நின்று ஏ.எல் பாடங்களுக்கு தங்களிடம் ரியூசனுக்கு வருமாறு பிள்ளைகளுக்கு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. இவர்களின் செயற்பாடு பிள்ளைகளை பாடசாலைகளில் இறக்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக ஓ.எல் பரீ்ட்சை எழுத மாணவியை கூட்டி வந்த தந்தை கருத்துத் தெரிவிக்கையில் ” இவர்களின் செயற்பாட்டை பார்க்கும் போது வயதுக்கு வராத பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்வதைப் போல் உள்ளது” என கூறி தனது விசனத்தைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடசாலைகளுக்கு அருகில் நின்று மாணவர்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கேட்டுள்ளார்கள்.

