புதினங்களின் சங்கமம்

பாலத்தின் கீழ் கிடந்த லக்‌ஷானின் சடலம்!! கொலையா என் விசாரணை!!

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் .தெரிவித்தனர். மேலும் இளைஞனின் மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.