வீதி படு மோசம் ,நடுவீதியில் வாகனங்கள் தரிப்பு! சங்கானை வைத்தியசாலை அம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்!! (Photos)

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான சங்கானை அரசினர் வைத்தியசாலையின் அவசர நோயாளிகளை ஏற்றிச் செல்லும் அம்புலன்ஸ் மற்றும் ஏனைய வாகன போக்குவரத்தில் பெரும் இடையூறு காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வைத்தியசாலையானது ஏனைய வைத்தியசாலைகள் போன்று பிரதான வீதிகளுக்கு அருகில் அமைந்திருக்கவில்லை. கிராமத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.எனினும் வீதிக்கட்டமைப்பில் உள்ள குறைபாட்ட்டினாலும் நடு வீதிகளில் இரவு பகலாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் வைத்தியசாலைக்கு செல்வதில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இவ்வைத்தியாசாலைக்கு, வைத்தியசாலை வீதி உட்பட 5 முக்கியமான வீதிகளினூடாக வலிகாமம் மேற்கு ,வலிகாமம்தெற்மேற்கு பகுதி மக்கள் வைத்தியசாலைக்கு செல்கிறார்கள் 5 வீதிகளும் மிக மோசமாக பாதிப்பட்டைந்துள்ளது. இவை ஐ றோட் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் பல வருடங்களாக இன்னும் வேலைகள் ஆரம்பிக்கப்பவில்லை.வலிகாமம் வடக்கு ,வலிகாமம் கிழக்கு ,யாழ் நகர் போன்ற பல இடங்களில் ஐ றோட் திட்டம் பல நிறைவடைந்தும் ஏனையவை நிறைவடையவும் உள்ளன.ஆனால் அத்தயாவசியமான தேவையாகவுள்ள வைத்தியாலை வீதிகளை முன்னுரிமையில் புனரமைப்பதற்கு ஐ றோட் திட்ட அதிகாரிகளும் பிரதேச சபையினரும் முயற்சி எடுக்கவில்லை என்பது கவலைக்குரியது.இதில் இன்னொரு வேடிக்கையான விடயம் வைத்தியாசாலையின் பிரதான வீதியான வைத்தியசாலை வீதி ஐ றோட் திட்டத்தில் உள்வாங்கப்படாது.அதற்கு அடுத்த சிறு வீதி “வைத்தியசாலை வீதி” என தவறுதலாக உள்வாப்பட்டு அதற்கான திட்டமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் வைத்தியசாலை வீதி எந்த திட்டத்திற்குள்ளும் வரவில்லை. இவ்வாறான இங்குள்ள “அறிவுகூடியவர்கள்” தான் திட்டங்களை முன்மொழிந்தவர்களும் அதனை அங்கீகரித்தவர்களும்.

Image may contain: tree and outdoor, text that says "M ADB ஆஸ்பத்திரி வீதி என போடப்பட்டுள்ள அருகிலுள்ள வீதி"

Image may contain: plant, outdoor and natureImage may contain: tree, plant, outdoor, nature and water

error

Enjoy this blog? Please spread the word :)