புதினங்களின் சங்கமம்

60 இலட்சத்தை ஏமாற்றிய பச்சைக் கள்ளன் ரெலசன்னை ‘அப்பாவி விடுங்கோ’ என்ற கிளிநொச்சி சட்டத்தரணிகள்! நடந்தது என்ன?

கிளிநொச்சியை சேர்ந்த இளைஞரிடமிருந்து 60 லட்சம் ரூபாயினை தொலைபேசி இலக்கத்தை Esim ஆக மாற்றி வங்கிக்கணக்கிலிருந்து மாற்றி சூட்சமமாக கொள்ளையடித்த வழக்கில் செட்டி வீதி , உடுவில் கிழக்கு உடுவில் சுண்ணாகம் எனும் முகவரியை சேர்ந்த சுகந்தன் ரெலசன் என்ற நபர் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் 10.03.2025 இன்று கிளிநொச்சி மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த்திய போது மற்றைய சந்தேக நபர்களை கைது செய்ய ஏதுவாக சந்தேக நபரை தற்போதைய நிலையில் எதிர்வரும் 12.03.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மேற்படி சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் திரு.தி.அர்ச்சுணா மற்றும் சட்டத்தரணி திரு ஐங்கரன் என நான்குக்கும் அதிகமான சட்டத்தரணிகள் சந்தேகநபர் ஒரு அப்பாவி அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் இல்லை அவர் குற்றம் செய்ய வைக்கப்பட்டுள்ளார் என கூறி வாதிட்டனர். மேலும் பணத்தை பறிகொடுத்தவர்கள் சார்பாக சட்டத்தரணி திருமதி S விஜயராணி ஆஜராகினார். மேலும் விசேட குற்றத்தடுப்பு பிரிவு(SCIB) பொலிஸார் பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து பக்க சமர்பணங்களையும் கவனத்தில் கொண்ட கௌரவ கிளிநொச்சி மேலதிக நீதவான் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

May be a black-and-white image of one or more people

May be an image of 1 person and studying