புதினங்களின் சங்கமம்

இலங்கை ஜனாதிபதி இரக்கம் காட்டுவாரா?

யாழில் விசர்க்கலா தன்னுடையதை அடக்கி வைத்திருந்தால் கொரோனா பரவாது!! ஊத்தைச் சேதுவுடன் நடப்பது என்ன?!! (Photos)

இன்று குவைத் நாட்டில் இருந்து தமிழர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார்.

விசா இன்றி இருந்தவர்களுக்கு குவைத் அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது என்றும் அவ்வாறு இருந்த இலங்கையர்கள் நாடு திரும்ப இலங்கை அரசு உதவி செய்யுமா என்று கேட்டிருந்தார்.

அண்மையில் கப்பல் ஒன்றில் இருந்து சிங்களவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை மீட்க ஜனாதிபதி உதவியிருந்தார்.

அதுமட்டுமல்ல அக் கப்பலில் இருந்த ஜேர்மன் பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கவும் மனிதாபிமானத்துடன் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு முன்னர் சீனாவில் படித்துக்கொண்டிருந்த அமைச்சர் விமல் வீரவம்சவின் மகன் நாடு திரும்ப ஜனாதிபதி உதவியுள்ளார்.

எனவே குவைத் நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஜனாதிபதி மனிதாபிமானத்துடன் உதவிட வேண்டும்.

யாராவது தலைவர்கள் இதில் அக்கறை காட்டுவார்களா?

குறிப்பு – குவைத்தில் யாராவது சிங்களவர் இருந்தால் மட்டுமே ஜனாதிபதி உதவ முன்வருவார். எனவே அங்கிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப வேறு ஏதாவது வழி தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி

Tholar Balan பேஸ்புக்…