லஞ்சம் வாங்கிய பின் கோழிப் பண்ணையை இயங்க விட்டுள்ளார்களா மாநகரசபை சுகாதாரப் பணிமனை? குருநகரில் நடக்கும் கேவலம்!!
யாழ் குருநகர் சந்தைக்க அருகில் 4ம் குறுக்குத் தெருவில் உள்ள கோலிக்குறோஸ் முன் பள்ளிக்கு எதிரே மக்கள் நெருக்கமாக உள்ள பகுதியில் இறைச்சிக் கோழி வளர்த்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள். குறித்த இறைச்சிக்கோழிப் பண்ணைக்கு முன்பாக உள்ள சிறுவர் முன்பள்ளிக்கு வரும் சிறுவர்கள் துர்நாற்றம் காரணமாக பெரும் உடல், உள உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாகவும் இது தொடர்பாக குறித்த முன் பள்ளியைச் சேர்ந்தோரும் அருகில் வாழ்பவர்களும் பல தடவைகள் யாழ் மாநகரசபை சுகாதாரப்பகுதியின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் குறித்த அதிகாரிகள் செய்யவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
தெருவில் தோடம்பழம் விற்ற சிறுவனை அடித்துக் கலைக்கும் யாழ் மாநகரசபை பாரிய சுகாதாரப் பிரச்சனை உள்ள கோழிப்பண்ணையை எதற்காக மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடாத்த விட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

