ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி 77 வயதான மூதாட்டி மீது வல்லுறவு!
வீட்டின் கூரை ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி, கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 77 வயதான மூதாட்டியை இனந்தெரியாத நபரொருவர் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவமொன்று மாவனல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. .
குறித்த மூதாட்டிக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லுறவுக்குள்ளான மூதாட்டி மாவனெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.
மாவனெல்ல பொலிசார் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
