புதினங்களின் சங்கமம்

வரதட்சணை கொடுமையின் உச்சம்.. மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட மாமியார் -நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆணுக்கும் கடந்த 2023 பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பெண் வீட்டில் இருந்து 45 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 15 லட்சம் ரூபாய் பணமும் நகைகளும் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த சில நாள்களுக்கு பிறகு அந்த பெண்ணின் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை அவமானப்படுத்தி தந்தை வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் ஊர் தலைவர்களுக்கு தெரியவந்ததை எடுத்து இரு வீட்டாரையும் அழைத்து பேசி அந்த பெண்ணை மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் கேட்ட வரதட்சணை கொடுக்காததால் அந்தப் பெண்ணின் மாமியார் கடந்த ஆண்டு மே மாதம், மருமகளுக்கு எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.இதனால் மருமகளின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவருக்கு எச்ஐவி நெகட்டிவ் என்று வந்துள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளுக்கு மாமியார் எச்ஐவி ஊசி செலுத்திய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

தனது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து நீதிமன்றத்தில் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாமியார் மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.