புதினங்களின் சங்கமம்

யாழில் பல கொள்ளைகள் நடாத்திய திருடன் பொதுமக்களிடம் சிக்கியது எப்படி?

யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கையில் அண்மை நாட்களில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்ட திருடன்
பொதுமக்களால் நேற்று மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

இத் திருடன் மணல்தறை ஒழுங்கையில் அண்மையில் சில வீடுகளில் ரீவி, காஸ் சிலிண்டர், கைத்
தொலைபேசி என்பன பகல்வேளைகளில் தொட்ச்சியாக திருடப்பட்டு வந்தன.

பகல்வேளையில் வீட்டார் பணிக்குச் சென்ற பின்னரே இந்த திருட்டுக்கள் இடம்பெற்றன. வீட்டில்
எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டாலும், கில்லாடி திருடன் கைவரிசையை காட்டி வந்தான்.

இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் உசார் நிலையிலேயே இருந்ததுடன், திருடனை பிடிக்க
முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று வீட்டிற்குள் பகல் புகுந்து தனிமையில் இருந்த மூதாட்டியை ஏமாற்றி
ஓர் ஏ1 ரக கைத் தொலைபேசியை களவாடிச் சென்றுள்ளான் ஒருவன்.

தகவல் அறிந்த அந்த பகுதியிலிருந்தவர்கள் துரிதமாக செயற்பட்டு, சிசிரிவி காட்சியின்
உதவியுடன் திருடனை மடக்கிப்பிடித்தனர்.

இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன் தனது திருட்டுக்களை ஒத்துக்கொண்ட நிலையில்
பொருட்களை மீட்பதற்காக யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.