புதினங்களின் சங்கமம்

யாழில் மீன்பிடி அமைச்சரின் திருவிளையாடல்கள் தொடர்கின்றது!! பல மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்!!

யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி திருவிளையாடல்கள் புரிந்து வருகின்றார் ஜே.வி.பி அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரனும் அவரது வாலுகளும். நேற்று நான்கு மணியளவில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில் 3:30 இற்கு அவசர இடர் முகாமைத்துவ கூட்டம் ஒழுங்கு செய்யபட்ட பொழுதும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதியின் வருகைக்காக மணித்தியாலமாக   யாழ் மாவட்ட அதிகாரிகள் காத்திருந்தார்களாம். அதன் பின்னர் அங்கு வந்த ஜே.வி.பி அமைச்சரும் அவரது அடிவருடிகளும் அங்கு புயலைப் பற்றி கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளைத் தெரிவிக்காது அரசியல்பாடம் நடாத்தி அதிகாரிகளை வெறுப்பேற்றியதாகத் தெரியவருகின்றது.

மீன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும்  டக்ளஸ்தேவானந்தா மற்றும் அங்கஜன் போன்றவர்களைப் போல செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.