கையிலும் வயிற்றிலும் குழந்தைகள்!! யாழ் முற்றவெளி விமானக் கண்காட்சி பகுதிக்குள் 2kg கஞ்சாப் பொதியுடன் சென்ற நயினாதீவு யுவதி!!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கையில் சிறுவன் ஒருவர் காணப்பட்டார். 6 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் பேருந்தில் வரும் போது, தனக்கு தெரியாமல் தனது கையில் யாரோ கஞ்சாப்பொதியை வைத்து விட்டார்கள் என கூறி அவர் கதறியழுதார். எனினும், பொலிசார் தகவல் திரட்டியதில் கைதான பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடலாமென சந்தேகம் எழுந்துள்ளது.

