மன்னார் வைத்தியசாலையில் இறந்த தாய் வேணுஜா, சிசுவின் சடலம் பிரணவன் செல்லையாவிடம் அனுப்பப்பட்டது ஏன்? வேணுஜா தாயின் பரபரப்பு வாக்குமூலம்!! video
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடாத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதே வேளை
சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்கச் செய்யுமாறு தாதியர்களிடம் கெஞ்சியும் அவர்கள் அதைக் கவனத்திற் கொள்ளாது போனதனால், குழந்தையையைப் பிரசவிக்க முடியாது கர்ப்பிணி பெண் உறவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்து அவருடைய தாயார் தெரிவிக்கையில்,
நான் இந்தியாவில் வசித்து வருகின்றேன். எனது மகள் திருமணம் முடித்து இங்கே வசிக்கிறார், நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாது இருந்த அவருக்கு இது முதற்குழந்தை என்பதனால் அவரைப் பராமரிப்பதற்காக,நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், எனது மகளை திங்கள் காலை பிரசவத்திற்காக, வைத்திய சாலையில் அனுமதித்திருந்தோம்.
அவர் வலியினால் துடித்திருக்கின்றார்,தன்னால் முடியவில்லையெனத் தாதியர்களிடம் கெஞ்சியுள்ளார்,நான் அவரைப் பார்க்க சென்ற போது, என்னை. வெளியே இருக்குமாறு கூறினார்கள்.
மாலை நான்கு மணியளவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள். பரபரப்பாக இருந்தனர். எனது மக்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறினர். நான் மகளை அனுமதி கேட்ட போது என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள், அங்கு எனது மகளைச் சுற்றி வைத்தியர்கள் மற்றும், தாதியர்கள் நின்றார்கள். அவர்கள் என் மகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார்கள்.
ஆனால் நான் பிரசவ அறைக்குள் சென்றபோதே என் மகள் எந்த அசைவுகளுமின்றியே இருந்தார். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தாயார் கண்னோருடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈட்டுபட்டனர். ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் இவ்வாறான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், வைத்தியசாலையின் கவனமின்மையே கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்,
சம்பவம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகர், அசாத் ஹனீபா கூறுகையில்,
இங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன, மரணம் நிகழ்கின்ற போது எமது விசேட மகப்பேற்று நிபுணர், வைதியர்கள், மற்றும் தாதியர்கள், கடமையிலிருந்துள்ளனர். எனவே முறையான விசாரணைகளை,மேற்கொண்டு பக்கச் சார்பற்ற நீதி வழங்குவோம் என்று தெரிவித்தார்.
அதேசமயம் இரவு 12 மணிவரை மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு வெளியேயும் பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நிலமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

