புதினங்களின் சங்கமம்

கொழும்பு பள்ளிவாசலிலில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள்….! பொலிஸார் வெளியிட்ட தகவல்..!

கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள பிரபல பள்ளிவாசல் வளாகத்தில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுகததாஸ விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.பள்ளிவாசல் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வாள்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.உரப்பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த கிணற்றில் மேலும் பல பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.