புதினங்களின் சங்கமம்

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்று கொள்ள உரிய முறையில் முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்று கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைப்பதில் காலம் தாமதத்தை ஏற்படுத்துவதால் பரீட்சைகளுக்கு முன் அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதில் சவாலை சந்திக்க நேர்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, உரிய முறையில் முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரியுள்ளது.