புதினங்களின் சங்கமம்

வண்ணான் குளத்தில் அடங்காத கள்ளக்காதல் மோகம்!! 35 வயது பெண்ணை குத்திக் கொன்றது 30 வயது கள்ளக்காதலன்!!

பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்த சந்தேக நபர் ஒருவர், தனது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு உயிர்மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை (18) மொறவெவ ப வண்ணான்குளம் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை
வண்ணான்குளம், லபுனோறுவ பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே கொலை இடம்பெற்றமை பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.