புதினங்களின் சங்கமம்

30 வருடம் தோல்வியே இல்லாது இருந்த டக்ளசின் தோல்விக்கு காரணம் என்ன?

முப்பது வருடம் தோல்வியே காணாது இருந்த ஈபிடிபின் செயலாளர் நாயகம் தோழர் ட்க்ளஷ் தேவானந்தாவின் தோல்விக்கு என்ன காரணங்கள் என ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயம். அவை இவையாக இருக்கலாம்….
1. இடையில் வந்த தம்பிக்காக கூடவே இருந்த தோழர்களை கைவிட்டது.
2.மக்களை பற்றிய அக்கறையை விட்டு முதலாளிமார்களை உருவாக்கியது.
3.பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கு மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டது.
4.அரசுடன் இருந்து கொண்டாலும் மக்கள் பாதிக்கப்படும் விடயங்களில் அக்கறை காட்டாதது.
5.தமிழ்ப்பிரதேசங்களில் அரச ஆதரவில் நடந்த அத்துமீறிய செயற்பாடுகளை கண்டிக்காதது.
6.கரையோரப்பகுதிகள் தொழில் செய்யும் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அட்டைப்பண்ணைகளை ஊக்குவித்தது.
7. பல லட்சம் மக்களின் விருப்புக்குரிய பிரபாகரனை போதைவஸ்து கடத்தல் காரன் என கூறியது.
8. கட்சியுடன் ஆதரவாக இருப்பவர்களின் வேண்டுகைகளை கிடப்பில் போட்டு புதிதாக வருபவர்களுக்கு உதவுவது.
9.செயல்த்திறனற்ற மாவட்ட, பிரதேச கட்சிச்செயற்பாட்டாளர்களை வைத்திருப்பது.
10.மக்கள் செல்வாக்கற்றவர்களை வேட்பாளர்களாக நியமித்தது. தலைவர, ரங்கன், தவநாதன் ஆகியோரை விட ஏனையோர் துளியும் மக்கள் செல்வாக்கற்றவர்கள்.ோ
11. பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பளஉயர்வு பிரச்சனை, விலை வாசி உயர்வு போன்றவற்றில் அக்கறை காட்டாதது.
12.தேர்தல் தவிர்ந்த காலங்களில் தொகுதி மக்களை சந்திக்காமை.
13.வைத்தியர் அர்ச்சுனா வெளிப்படுத்திய சாவகச்சேரி பிரச்சனையில் மக்களின் பக்கம் நிற்காமை.
14.நல்லவற்றை ஊக்குவித்தலும் தீயவற்றை கண்டித்தலும் இல்லாமல் அனைத்தையும் ஆதரிக்கும் அதிஉயர் அரச விசுவாசம்
15. தோழர்களின் வீட்டு நிகழ்வுகளில் குறிப்பாக மரணநிகழ்வுகளில் கூட உரிய நேரத்துக்கு சமூகமளியாதிருத்தல்
போன்ற பலவே தோல்விக்கான காரணங்கள். இந்த தோல்வி ஈபிடிபிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் திருந்திக்கொள்ளவும் தங்களை தாங்களே திருத்திக்கொள்வதற்கான காலமாக இருக்கும்.