Home Vampan memes நல்லூர் பிரதேச செயலகத்தில் நடந்த அலங்கோலம்!! பதிவு

நல்லூர் பிரதேச செயலகத்தில் நடந்த அலங்கோலம்!! பதிவு

இன்று நடந்த உண்மைப்பதிவு.

இன்று 10.00 மணிக்கு நான் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு எனது பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக சென்று இருந்தேன். அங்கு மூடப்பட்டுள்ளது என போடப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே உத்தியோகத்தர்கள் இருந்தனர். உள்ளே இருந்த ஒருவரை கேட்டேன் இன்று பிறப்புச் சான்றிதழ் எடுக்க முடியாதா என்று அதற்கு அவர் கூறிய பதில் அருகில் இருப்பவரை கேட்கவும் என்றார். ( அவருக்கு இன்று இல்லை என்று கூற ஏலாதாம் பக்கத்தில இருக்கிற உத்தியோகத்தரை கேட்கட்டாம்) அதனால் நான் அங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் பிரதேசச் செயலகத்திற்கு சென்றேன். அங்கு உடனடியாக எனது பிறப்புச் சான்றிதழினை பெற்றுக்கொண்டேன்.

யாழ்ப்பாண பிரதேச செயலகம் சேவை புரியும் போது நல்லூர் பிரதேச செயலகம் சேவை புரியாதக்கான காரணம் தான் என்ன ?
(மின்சாரம் தடைப்பட்டு இருந்தது என அவர்கள் கூறவும் முடியாது மின்விசிறி மின்விளக்கு அனைத்தும் ஒளிர்ந்தது)
இது ஒரு பேஸ்புக் பதிவு