புதினங்களின் சங்கமம்

நல்லூர் ஹரி ஹோட்டல் மூடப்பட்டது!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் உணவருந்திவந்த ஹரி ஹோட்டல் சுகாதார உத்தியோத்தர்களால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று இரவு மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று, யாழ்.நகர் ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் அஹ்ஷதை சைவ உணவகமும் மூடப்பட்டது. குறித்த உணவகத்தில் பருத்தித்துறையில் தொற்றுக்கு உள்ளான இளைஞர் உணவருந்திச் சென்றதாக தெரியவந்ததை அடுத்தே அது மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.