புதினங்களின் சங்கமம்

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் பாரை மீன் குழம்பும், மெத்தையும் கேட்டு தேர்தல் அதிகாரி நடாத்திய பிரளயம்!!

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் வாக்களிக்கும் நிலையப் பொறுப்பாளராக (SPO) தேர்தல் கடமைக்குச் சென்ற கொக்குவில் பகுதி பாடசாலை அதிபரான ஒருவர் நடாத்திய பிரளயத்தால் குறித்த பகுதி விதானையார் திக்குமுக்காடிய சம்பம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. வாக்களிப்பு நிலையத்திற்கு கடமைக்கு வந்த அதிபர், அந்த நிலையத்தின் வாக்களிக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த அந்த ஏரியா விதானையாரை அழைத்தார். தனக்கு இரவு தங்கி படுப்பதற்கு பு்திய மெத்தை மற்றும் குளிப்பதற்கு சவருடன் (shower) கூடிய குளியல் அறை போன்றவற்றை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். அத்துடன் தனது சாப்பாட்டிற்கு பாரை மீன் குழம்புடன் சாப்பாடு தருமாறும் தனக்கு ரீ தேவை வேண்டாம் என்றும் ஒன்றில் துாய பசும்பால் அல்லது மைலோ ஏற்பாடு செய்துதருமாறும் கேட்டுள்ளார். இவற்றை கேட்ட விதானையார் அந்த இடத்தை விட்டு அகலாது நீண்ட நேரம் அதிர்ச்சியில் நின்றதாக தேர்தல் கடமைக்காக அங்கு சென்ற பணியாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபர்களை (SPO) பொறுப்புக்களில் நியமிப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஏனைய உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.