புதினங்களின் சங்கமம்

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல ஆயத்தமாகி இப்படி ஒரு வியூகம் அமைக்கிறார் சுமந்திரன்?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி 7 ஆசனங்களை பெறுவது உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அங்கு ஜேவிபி 1, முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. கோடீஸ்வரன் கட்சி சார்பில் அதிக விருப்பு வாக்கை பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 1 ஆசனத்தை வென்றது. அங்கு எஸ்.குகதாசன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னி மாவட்டத்திம் தமிழ் அரசு கட்சி 1 ஆசனத்தை வென்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. யாழில் சிறிதரன் வெற்றியீட்டியுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.

தமிழ் அரசு கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளதால், அதற்கு தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கலாமென கருதப்படுகிறது. தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தால் 8 ஆசனங்களை பெறும்.  ஆகவே தேசியப்பட்டியல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆசனம் தேவை என கூறி சுமந்திரன் தரப்பு ஒரு வியூகத்தை அமைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை தமிழ் அரசு கட்சி வெற்றியீட்டியுள்ளது. யாழ்ப்பாண தொகுதியில் யாரும் வெற்றியீட்டவில்லை. இதனால், யாழ் தேர்தல் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் வெற்றியீட்டவில்லையென்றால், யாழ் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவசியமென்ற அடிப்படையில், எம்.ஏ.சுமந்திரன் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்படலாமென ஊகிக்கப்படுகிறது.