யாழில் காவாலிக் கும்பலால் அடித்து நொருகு்கப்பட்ட வீடு!! புகைப்படங்கள்
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வன்முறை சம்பவம் நேற்று (03) இரவு 11 மணியளவில் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பரது வீடே இவ்வாறு அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
கிறிஸ்துராஜா கொலின்ஸ் கடந்த காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிந்தவர் என தெரியவருகிறது.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.