புதினங்களின் சங்கமம்

யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற காவாலிகளைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்!! பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சபாபதி பிள்ளை வீதியைச் சேர்ந்த உதயன் அவர்களின் மகளான லோஜி என்பவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கஞ்சா கசிப்பு போன்ற வியாபாரம் மற்றும் பாவனை தொடர்பாக பல வழக்குகள் இவர்மீது பதிவாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுதலையாகி வந்துள்ளார். நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை கைவிட்டுள்ளார் என கூறப்படும் நிலையில் பாடசாலைக்கு செல்லும் சிறுமிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி பாடசாலை முடிவடையும் வேளைகளில் பாடசாலை முன் நின்று பெண் பிள்ளைகளுடன் சேட்டை விடுவதும் வளமையான தொழிலாக கொண்டுள்ளர்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் நேற்று 24/08/2026 பிற்பகல் 2.30 மணியளவில் சபாபதிப் பிள்ளை வீதியில் வசித்துவரும் 12 வயது சிறுமி ஒருவர் கல்வி நிலையத்திற்கு செல்லும்போது சிவப்பு நிற ஓட்டோவில் நபர் உள்ளிட்ட ரவுடிகள் கும்பல் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்கள். சம்பவத்தை அறிந்த ஊர் மக்களின் கடுமையான முயற்சியால் குறுகிய நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் வழங்கியும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் இல்லை ரவுடிகள் கைது செய்யப்படவில்லை.
சுன்னாகம் பகுதியில் பல குற்றச் செயல்கள் நடப்பதனால் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கபட்டபோதும் இவ்வாறான செயல்கள் தீவிரமாக தொடர்ந்து நடப்பது மக்களிடையே பெரும் விசனத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x