புதினங்களின் சங்கமம்

ஸ்ரீரங்காவை கைது செய்ய வலை வீசித் தேடும் பொலிசார்!! வவுனியாவில் கூலாக இருந்து பேட்டி கொடுத்த ஸ்ரீரங்கா!! என்ன சொன்னார்?

சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கா, வவுனியாவில், ஊடகவியலாளர்களை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்துள்ளார்.

அப்போது, 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என ஜெ. ஸ்ரீரங்கா கோரியுள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதி சுயேச்சைக் குழு வேட்பாளரான ஜெ. ஸ்ரீரங்கா, வவுனியாவில், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி யூட்சன், மன்னார் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அந்த நீதிமன்றத்துக்கு கல் வீசப்பட்டது என்றும்,ரிஷாட் பதியுதீன் மிரட்டினார் என்றும் முறைப்பாடு செய்திருந்தார். இது உரிய முறையில் விசாரணை செய்யவில்லை என கூறி பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா, உயர் நீதிமன்றத்தை மூடி உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இணைந்து பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர். இதன் பின்னர் விசாரணைகள் நடாத்தப்பட்டன.

இந்நிலையில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு அரசுக்கெதிரானது என கூறி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பினார்.

தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமாரவும் நாங்களும், பிரதம நீதியரசரை விலக்கியமை பிழை என கூறியதோடு இதனை செய்த அரசாங்கம் நீதித்துறையை குழி தோண்டி புதைக்கின்றது என தெரிவித்திருந்தோம்.

ஜூன் 5ம் திகதி வழக்கறிஞர்கள் முகப்புத்தகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பின்புலத்துடன் மன்னாரில் கடமையாற்றிய நீதிபதியை தொலைபேசியில் அச்சுறுத்தி நீதிமன்றத்தை தாக்கி சேதப்படுத்தி தீ வைத்த வழக்கு, நாளைய தினம் தீர்ப்பாக திகதி இடப்பட்டுள்ளது என எழுதியுள்ளார்.

இதேபோன்று ஜூன் ஆறாம் திகதி யும் 2012ம் ஆண்டு மன்னாரில் தமிழ் மீனவர்களின் உரித்து பறிக்கப்பட்டு ரிஷாட் பதியுதீனின் பின்புலத்துடன் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கு இன்றைய தினம் வண்ணார் மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டிருந்தது.

வழக்கு தொடுத்தோர் தரப்பில் எழுத்து மூலம் சமர்ப்பணம் தாக்கல் செய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரியமையால் மீண்டும் தீர்ப்புக்காக 18ம்திகதி ஜூலை 2024ம் ஆண்டு தீர்ப்பு திகதியிடப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இது ஒரு பொது ஆவணமாகும். இது தவிர்ந்து யாழ் வழக்கறிஞர்கள் மன்னார் நீதிமன்றதில் இவ்வழக்கு தொடர்பாக அவதானித்திருந்தனர்.

எனவே, இது ஒரு சாதாரண விடயமல்ல. மேலும் மன்னார் நீதிமன்றத்தை தீ வைத்து எரிக்க முற்பட்ட வழக்கை இன்று சுவரொட்டி ஒட்டியமை என்று பொய் பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலைமைக்கு ரிஷாட் பதியுதீன் தள்ளப்பட்டுள்ளார்.

எனவே, இது தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ காலத்தில் விசாரணை உரிய முறையிலே நடைபெறவில்லை என அனுரகுமார திசாநாயக்க பல முறை கூறியிருக்கின்றார். எனவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலே நீதிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை உரியமுறையிலே மீண்டும் விசாரணை செய்ய வேண்டும்.

மேலும் மன்னார் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து தீ வைத்தவர்களை விடுதலை செய்வார்கள் என்ற அச்சம் இருப்பதாக குறித்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டியினை தயாரித்தவர்களை நான்கு மாதத்திற்கு முன்னரே கைது செய்துள்ளனர்.

நான், வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நியமன பத்திரம் கையளிக்கப்பட்ட பின்னர். கைது செய்யப்பட்ட குறித்த தரப்பினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் இவ் சுவரொட்டி வழக்கில் ரங்காவிற்கு சம்பந்தம் உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

2012ம் ஆண்டு மன்னார் நீதிமன்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் சம்மந்தப்பட்ட வழக்கு என்றும் உரிய முறையில் நீதி கிடைத்ததா என சட்டத்தரணி சுகாஸின் முகப்புத்தகத்தின் ஊடாக கேள்வி எழுப்பி உள்ளார். அதனையே சுவரொட்டியில் அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ரங்காவிற்கு சம்பந்தம் உள்ளதாகவும் மூன்று மாதம் சிறையில் இருக்கும் கைதி கூறி இருக்கின்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் மாதத்தில் ஊடக சந்திப்பின் ஊடாக குறித்த சுவரொட்டியினை தயாரிக்க சொன்னது ரிஷாட் பதியுதீன் என தெரிவித்திருந்தனர். இதனை ஏன்? சிஐடி மற்றும் பொலிஸார் கவனிக்காவில்லை.

வில்பத்து காட்டினை காட்டினை அழித்தல், மற்றும் வீட்டு வேலைக்காரியை கற்பழித்தல் கொலை செய்தமை, ஈஸ்டர் தாக்குதலில் தேவாலயத்தை அழித்தது, பட்டாணி ராசிக் கொலை போன்ற வழக்குகள் எம்மீது இல்லை. இவ்வளவு விடயத்திற்கு பின்னராக நாங்களும் நீங்களும் சமமென கூறுவதற்காக குறித்த சுவரொட்டி தொடர்பான விடையத்தினை கொலைக்கு மேலாக காட்டுகின்றனர்.

குறித்த சுவரொட்டி ரங்காவின் வழக்கு தொடர்பானது இல்லை. குறிப்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு நேர்ந்தது மிகவும் மோசமான கொடூரமான செயல் என தெரிவித்திருக்கிறார்.

எனவே புதிய நீதித்துறை அமைச்சரிடமும் ஜனாதிபதியிடமும் 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக மீண்டும் கலந்துரையாடப்பட்டு குறித்த சூத்திரதாரிகள் சவால் விட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

இனி வரும் காலத்தில் தமிழ் மக்களின் மீது ரிஷாட் பதியுதீன் சவாரி செய்ய முடியாது என தெரிந்திருக்கின்றது. குறிப்பாக குறித்த சுவரொட்டியினை பாதாள உலகக் குழுவில் இருப்பவரான சொப்பே என்பவரின் மகனான கிப்சிறி தயாரித்துள்ளார். குறித்த கிப்சிரி கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சகல சுவரொட்டிகளை தயாரிப்பவராகும் என்றும் ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x