இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் சடலமாக மீட்பு!!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய, 49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.