சீர் செய்யப்படாத வீதித் தடை~கிளிநொச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்~கொந்தளித்த மக்கள்..!
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்றைய தினம் (01.03.2023) நடந்துள்ளது.
சீர் செய்யப்படாத வீதி வேகத்தடை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த வீதி வேகத்தடையில் அப்பகுதியில் தினந்தோறும் விபத்துகள் பதிவாகி வருகின்றதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனை சீர் செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என முகமாலை பிரதேச மக்கள் குற்றம் சாட்டுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
