எதிர்காலத்தில் மொபைல் போன் என்ற ஒன்றே இராது!! மூளைக்குள் சிம்…
எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது என்றும் வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், “எண்ணங்களின் மூலம் உங்கள் ஃபோனைக் கட்டுப்படுத்த அனுமதிக்க, உங்கள் மூளையில் நியூராலிங்க் இன்டெர்ஃபேஸ்-ஐ பொருத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எலான் மஸ்க், “எதிர்காலத்தில் போன்களே இருக்காது. நியூராலிங்க் மட்டுமே” என பதிலளித்துள்ளார். 2016ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது.
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் முதன்முறையாக ஒரு மனிதனுக்கு மூளையில் சிப்பை வெற்றிகரமாக பொருத்தியுள்ளது. இந்த மூளைச் சிப்பைப் பொருத்திக்கொண்டிருப்பவர் 29 வயதான நோலண்ட் அர்பாக். ஒரு விபத்துக்குப் பிறகு அவரது உடல் தோள்களுக்குக் கீழே செயலிழந்துவிட்டது.
அவருக்கு ஜனவரி 28ஆம் திகதி மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டது. இரண்டு நாள் அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், நியூராலிங்க் தனது பிளாக் பதிவு ஒன்றில் நோலண்ட் அர்பாக்கின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி விரிவான அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. நோலண்ட் அர்பாகின் உடல்நிலை குறித்து எலான் மஸ்க்கும் பல்வேறு ட்வீட்களைப் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Neuralink Chip பொருத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், மற்றொரு நபருக்கு Neuralink Chip பொருத்தும் பணியை Neuralink நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதற்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அந்த நிறுவனம் பெற்று வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் இரண்டாவது நபருக்கு Neuralink Chip மூளையில் பொருத்தப்பட்டு விட்டால், இரண்டு பேரும் செல்போன் உதவியின்றி ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழில்நுட்பம் வெற்றியளிக்கும் பட்சத்தில் 2050ஆம் ஆண்டில் செல்போன் என்ற கருவியே இல்லாமல் போகம் சாத்தியம் இருப்பதாக தெரவிக்கப்படுகின்றது.