யாழில் தந்தை, மகள் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது!! (Video)

யாழ் பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.

பிறவுன் வீதி – நரிக்குண்டு குளம் பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகளும் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். திருத்த வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் பயணித்த வேளை வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது.

வீதியில் பயணித்தவர்களின் முயற்சியினால் தந்தையும் மகளும் உயிர்தப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: outdoor Image may contain: one or more people, tree, outdoor and natureImage may contain: shoes and outdoorImage may contain: one or more people, tree and outdoor

error

Enjoy this blog? Please spread the word :)