மகிந்த கட்சி சார்பாக யாழில் போட்டியிடப் போகும் கீதநாத்! இவனே சிறந்த கட்சி விசுவாசி!
”அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.”
இது ஒரு மூதுரைப் பாடல்…. இந்தப் பாடலின் பொருள் கீழே உள்ளது.
குளத்தில் நீர் வற்றியவுடன் அங்கு வாழ்ந்த கொக்குகள், நாரைகள் எல்லாம் வேறு நீர் உள்ள குளத்திற்கு பறந்து சென்று விடுமாம். ஆனால் அந்தக் குளத்தில் வாழ்ந்த ஆம்பல் போன்ற கொடி, செடிகள் எல்லாம் அந்தக் குளத்தில் தொடர்ந்து வாடியிருக்குமாம்….
செய்தி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கீதநாத் காசிலிங்கம் கையொப்பமிட்டார் .
ஆகவே இந்த கீதநாத் காசிலிங்கத்தின் மனம் கோணாதவாறு பல்லாயிம் வாக்குகளை போட மனமில்லாது விட்டாலும் சில நுாறு வாக்குகளையாவது வழங்குங்கள் யாழ்ப்பாண வாக்காளர்களே…


