புதினங்களின் சங்கமம்

யாழில் ஓட்டோவைக் களவெடுத்துச் சென்ற கொள்ளையனை துரத்திய பொலிசார்! மாணவனின் சைக்கிளை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையன்!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத்  திருடி சென்றவரைப் பொலிஸார்  கைதுசெய்ய முற்பட்ட வேளை, சந்தேகநபர் வீதியில் சென்ற  மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நபரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு, மருத்துவ மனைக்கு சென்று திரும்பிய வேளை,

தனது முச்சக்கர வண்டி களவாடப்பட்டதை அறிந்து அது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர்  குறித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் பயணித்த போது, அதனை அடையாளம் கண்டு வழிமறித்துள்ள நிலையில்,

அந்நபர் முச்சக்கர வண்டியை  கைவிட்டு விட்டு,  வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு அதில் தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.