புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்திலிருந்து ஆழியவளை சென்ற அரச பஸ்சுக்குள் புகுந்து மாணவிகளுடன் வருணன் லீலை!!

நல்ல நோக்கத்திற்காக வம்பன் இணையத்தளத்திற்கு அனுப்பட்ட வீடியோவை, வட பிராந்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் இப்படியான தலைப்புடன் வரும் பதிவை ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என்பதற்காகவே இவ்வாறான செய்தித் தலைப்புடன் நாம் வெளியிட்டுள்ளோம்… வடமராட்சி கிழக்குப் பகுதி சுமந்திரன் செல்லப்பிள்ளையான சுகிர்தனின் கோட்டையாகும்… அவரும் இதனை பார்வையிடுவார் என்று நம்புகின்றோம்….

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆழியவளை நோக்கி பயணம் மேற்கொள்ளும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்சின் நிலையே இது. மழை காலத்தில் குறித்த பஸ் வண்டியின் மேற்பகுதியில் உள்ள துவாரங்கள் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசஊழியர்கள், பயணிகள் நனைந்தவாறே பஸ்சினுள் பிரயாணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

குறிப்பு – இங்கு வருணன் என கூறப்பட்டவர் மழைகளின் தேவதையான வருணபகவானே ஆவார்.