புதினங்களின் சங்கமம்

சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்தவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு!!

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத வாகன இறக்குமதியால் இலங்கை சுங்கத்துறைக்கு 5 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மாத்திரம் நிற்காமல், சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x