புதினங்களின் சங்கமம்

சிங்களவனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது யாழ் மாதகல் பகுதி!!

மாதகல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பெயர் முகப்பும் கண்டு கொள்ளாத அதிகாரத்தில் உள்ள அரசியல் நரிகளும்.

இந்த இடத்தின் வரலாற்றுப் பெயர் ஜம்புகோளப் பட்டணம், பின் பேச்சு வழக்கில் இன்று வரை பேசப்படும் பெயர் சம்பில்துறை.

இந்த இடத்துக்கு அருகாமையில் திருவடி நிலை என்று அழைக்கப்படுகின்ற கடற்கரையும் இருக்கின்றது.
அதற்கான புராணக்கதையை இராமாயணத்தைடன் இணைப்பர்.

சம்பில் துறையில் சம்புநாதர் என அழைக்கப் பெறும் சிவாலயம் இருந்ததாக கூறுவர். இந்த சம்பில் துறைமுகத்தில் தான் சங்கமித்திரையும் மகிந்தனும் வந்திறங்கினர் என்றும் அவர்கள் புத்த மதத்தைப் பரப்ப அரச மரத்துடன் வந்தனர் என்று வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.

போருக்கு முன்னர் இந்த இடத்தில் ஒரு தூபிக் கல்லொன்றை கடற்படையினர் வைத்து வழிபட்டனர். அவர்கள் இல்லாத நேரம் தூபியை தூக்கி எறிந்துவிடுவர் எமது இளைஞர்கள்.

ஆனால் போரின் பின்னர் அந்த இடம் புனித பூமியென உருவகப்படுத்தி மிகப்பெரிய புத்த விகாரை கட்டப்பட்டு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தைப் பார்வையிட பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்கள் வருகை தருகின்றார்கள்.

இந்த பகுதியானது திருகோணமலையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான கன்னியா எவ்வாறு சிங்களவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருக்கின்றதோ அவ்வாறே மாதகலின் இப் பகுதியும் சிங்களவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் தற்சமயம் இருக்கின்றது என்பது நிதர்சனம்..