யாழில் பதிவுத் திருமணம் செய்த பெண் உத்தியோகத்தர் அலுவலக பீயோனுடன் கள்ளத் தொடர்பு என மொட்டைக் கடிதம் எழுதியது யார்?
யாழில் மொட்டைக் கடிதம் ஒன்றால் பதிவுத் திருமணம் செய்த அப்பாவிப் பெண் உத்தியோகத்தர் ஒருவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. 32 வயதான பெண் உத்தியோகத்தருக்கும் அதே வயதான ஆசிரியர் ஒருவருக்கும் அண்மையில் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது. யாழ் நல்லுார் பகுதியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் குறித்த பெண் உத்தியோகத்தர் முகாமைத்துவ அலுவலராக கடமையாற்றி வருகின்றார். அங்கு கடமையாற்றி வந்த போது, வெளிக்கள வேலை செய்யும் ஆண் உத்தியோகத்தர் ஒருவரின் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை குறித்த பெண் உத்தியோகத்தரே பொறுப்பில் வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் அந்த ஆவணங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்த வெளிக்கள ஆண் உத்தியோகத்தர் அப் பெண் அலுவலர் ஊடாக முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார். பெண் அலுவலரின் பொறுப்பில் இருந்த அந்த ஆவணங்களை திருடுவதற்கும் முயன்றதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அந்த பெண் உத்தியோகத்தர் தனது பொறுப்பில் இருந்த குறித்த ஆண் அலுவலரின் ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அடங்கிய அலுமாரியின் திறப்பினை தான் வேலைக்கு வராத நேரத்தில் அங்கு கடமையாற்றிய தனக்கு நம்பிக்கையான அலுவலக உதவியாளரிடம் கையளித்துவிட்டே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அத்துடன் தனது மேலதிகாரிக்கும் இது தொடர்பாக தெரிவித்துவிட்டே லீவில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த பெண் அலுவலருக்கு பதிவுத் திருமணம் அண்மையில் நடைபெற்றுள்ளது. பதிவுத் திருமணம் நடந்து முடிந்து சில நாட்களில் பெண்ணின் கணவன் கற்பிக்கும் பாடசாலைக்கு கணவனின் பெயரில் கணனியில் ரைப் செய்யப்பட்ட கடிதம் ஒன்று வந்துள்ளது. அக் கடிதத்தில் குறித்த பெண் அலுவலருக்கும் அங்கு கடமையாற்றும் அலுவலக உதவியாளருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் பல இடங்களுக்கு சென்று தங்கியிருந்துள்ளதாகவும் சில விடுதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அந்த விடுதியில் கடமையாற்றுபவர்களை விசாரிக்குமாறும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதுடன் அலுவலக விழா ஒன்றில் கூட்டாமாக நிற்கும் போது பெண் அலுவலருடன் அந்த பீயோன் ஒட்டி நிற்கும் காட்சியையும் புகைப்படமாக எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் பெண் அலுவலரின் தனிப்பட்ட அலுமாரித் திறப்பை அந்தப் பீயோனே கையாள்வதாகவும், அது போலவே அவளையும் தன்வசப்படுத்தி பீயோன் வைத்துள்ளதாகவும் தொடர்ச்சியாக தொலைபேசியில் இரவில் இருவரும் வீடியோ காட்சி மூலமாக அந்தரங்கத் தொடர்பைப் பேணுவதாகவும், பீயோனின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு நம்பாவிட்டால் மனைவியின் தொலைபேசியை ஆராய்ந்து பார்க்கவும் எனவும் அக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதன் பின்னர் தனக்கு வந்த மொட்டைக் கடிதத்தைப் பற்றி பெண் அலுவலரான மனைவிக்கு தெரிவிக்காத ஆசிரியர் தனது மனைவியை குறித்த பீயோன் தொடர்பாக தொடர்ச்சியாக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளார். அத்துடன் மனைவியை சந்திக்கச் சென்ற ஒரு நாள் மனைவியின் கைத்தொலைபேசியை ஆராய்ந்துள்ளார்.பீயோனின் தொலைபேசி இலக்கத்தை மனைவியின் போனில் பதிவு செய்து பார்த்த போது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மனைவி கேள்வி எழுப்பி அந்த பீயோன் தொடர்பாக ஏன் தொர்ச்சியாக கேட்கின்றீர்கள், ஏன் எனது தொலைபேசியில் அவனது இலக்கத்தை பார்க்கின்றீர்கள்? என்ன பிரச்சனை என கேட்ட போதே இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு பெண் அலுவலரான மனைவியை கணவன் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இதன் பின்னர் இரு தரப்பு உறவினர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. தற்போது குறித்த மொட்டைக் கடிதத்தை எழுதியது யார்? என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். அத்துடன் குறித்த ஆசிரியர் தனக்கு தேவையில்லை என பெண் அலுவலர் பொலிஸ் நிலையத்தில் வைத்து தெரிவித்ததாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வெளிக்கள உத்தியோகத்தரின் புகைப்படங்கள் மற்றும் அவரது ஊழல் செயற்பாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான சகல விபரங்களையும் வம்பன் பெற்றுள்ளான். குறித்த மொட்டைக் கடிதத்த எழுதியது யார் என ஆராய்ந்து அறிந்த பின் சகல விபரங்களும் வெளியிடுவோம்.