யாழ் இருபாலை தனியார் ரியூசன் சென்றர் ஆசிரியர் இந்திரஜித்தின் வெறித்தனம்!! பொலிஸ் விசாரணை!!!
யாழ் இருபாலையில் இயங்கும் தனியார் கல்வி நிலையம்ஒன்றில் விஞ்ஞானபாட ஆசிரியராக கற்பிக்கும் இந்திரஜித் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கி வருவதாகவும் இவரது தாக்குதல் காரணமாக கால்கள் வீங்கிய நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
இரு மாணவர்களுக்கிடையில் புத்தகப் பை தொடர்பில் இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த ஆசிரியர் புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோப்பாய் பொலிசார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
இருப்பினும் அந்த ஆசிரியரை நீதிமன்றத்திற்கு செல்லவிடாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.
குறித்த ஆசிரியரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.