கிளிநொச்சியில் கணவனின் தந்தையால் கர்ப்பமான குடும்பப் பெண்! யாழில் கருக்கலைப்பு!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 27 வயதான குடும்பப் பெண் கருக்கலைப்பு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் இன்னொரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வெளியேறியுள்ளார். குறித்த பெண்ணின் கணவனின் தந்தையே பெண்ணை கருக்கலைப்புக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிப்பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவன் அரபு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். பெண்ணுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந் நிலையில் அப் பெண் தனது கணவனின் குடும்பத்துடனேயே தங்கி வாழ்கின்றார். இவ்வாறான நிலையிலேயே அப் பெண் மீண்டும் கர்ப்பமானதாகவும் தெரியவருகின்றது. குறித்த கர்ப்பத்திற்கு பெண்ணின் மாமனாரே காரணம் என வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. வலிகாமம் பகுதியில் செயற்படும் வைத்தியசாலை ஒன்று சட்டவிரோத கருக்கலைப்புக்களை மேற்கொண்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.