கிளிநொச்சியில் பள்ளிக்கூடம் செல்லாது இலங்கையைச் சுற்றப் போகும் 11வயது சிறுவனைப் புகழும் வெங்காயங்கள்
தற்போது இலங்கையில் சில வெங்காயங்கள் ஊரைச் சுற்றுகின்றேன் என்ற போர்வையில் டிக்டொக் மற்றும் பேஸ்புக், யூரியூப்களில் தமது திருவிளையாடல்களைக் காட்டி வருகின்றார்கள். அவர்களின் வெங்காய வேலைக்கு சில பேய்க்கு பேன் பார்த்த விசர்க் கூட்டங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம் என்று அவர்களை புகழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் 11 வயது பாடசாலை மாணவன் பாடசாலைக்கு செல்லாது ஊரைச் சுற்றுகின்றேன் என கிளம்பி திரிவதற்கு ஊடகவியலாளர்கள் சிலர் மற்றும் கிறீஸ்தவ பாதர் உட்பட பலர் வெங்காய வேலை பார்த்து வருகின்றார்கள். கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய சிறுவனை உடனடியாக பிரதேசசெயலக சிறுவர் பிரிவு பிடித்து பாடசாலைக்கு அனுப்புவதுடன் குறித்த சிறுவனின் பெற்றோரை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப நடவக்கை எடுக்க வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாததால் சிறுவயதில் சாதனை நிலைநாட்ட வேண்டும் என்ற அவாவில் குறித்த சிறுவன் இலங்கையை சுற்ற தொடங்கியுள்ளானாம் என அவனது தந்தை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளாராம். இவ்வாறு இவனுக்கு உற்சாகம் கொடுத்தால் இனி வரும் காலம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத ஏாளமான மாணவர்கள் ஊரைச் சுற்றி சாதனை நிலைநாட்ட தொடங்கி விடுவார்கள். அவர்களின் பின்னாலும் இந்த வெங்காயங்கள் கமராவைத் துாக்கிச் செல்வார்களா?
இது குறித்த சிறுவனின் பெற்றோரால் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான சிறுவர் துஸ்பிரயோகமாகும். கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரே இது உங்கள் கவனத்திற்கு