புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாண பரீட்சை வினாத்தாளில் புகுந்தது சைக்கிள்!! கடுகடுப்பில் பொலிசார்!!

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் , அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

“ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சியான கஜேந்திரகுமாரின் சைக்கிள் கட்சி கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும். இந்த சொல் வினாத்தாளில் வந்ததால் ஏனைய தமிழ்க்கட்சிகளும் அரச ஆதரவுக்குழுக்களும் பொலிசாரும் கடுப்பில் உள்ளதாக அறியமுடிகின்றது.

May be an image of ticket stub and text that says "5275 மாகாணக் கல்வித் திணைக்களம் வடக்கு மாகாணம் மூன்றாம் தவணைப் பரீட்சை பரீட் 2023(2024) தமிழ்மொழியும் இலக்கியமும் I மணித்தியாலம் தரம் 22 I பகுதி மிகப் பொருத்தமான விடையைத் விடை தெரிவு செய்க."May be an image of ticket stub and text that says "16. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது என்ற பழமொழி உணர்த்துவது அளவுகடந்த துன்பம் நீரின் முக்கியத்துவம் (3) சென்றகாலம் திரும்பி வராது அழுது வெள்ளத்தை அடக்க முடியாது ஒரு நாடு இருதேசம்' என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் (1) தனி வாக்கியம் கலப்பு வாக்கியம் தொடர் வாக்கியம் கூட்டு வாக்கியம் 18. கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல் (1) கடல் கப்பல் 19. மேகம் கதவு வானிலை சீரற்றுக் காணப்படுகின்றது. மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள். இவ்விரு மிதப் பொருத்தமான இணைப்பிடைச்சொல்"