புதினங்களின் சங்கமம்

பாராளுமன்றத் தேர்தலில் ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்ந்து அநுரா மீது தாக்குதல் நடாத்தலாம்!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அநுராவுக்கு பெரும் பலப்பரீட்சையாக அமையலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் அநுராவின் கட்சிக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே அநுரா நினைக்கும் பல மாற்றங்களை எந்தவித தடங்களும் இன்றி கொண்டு வரமுடியும். ஆனால் அவ்வாறு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை அநுராவுக்கு இலகுவாக கொடுப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒரு போதும் இடமளிக்காது. தற்போதய சூழ்நிலையில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகலாம். அதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந் நிலையில் அநுரா பாராளுமன்றத்தைக் கலைத்த பின் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை எடுப்பதன் மூலம் மிகப் பெரும் மக்கள் பலத்தை தன்பக்கம் கொண்டு வரமுடியும். நாட்டைச் சீரழித்த ஊழல்வாதிகளான பெரும் தலைகளையும் சமூகக் குற்றங்கள் செய்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இனிவரும் ஒவ்வொரு நாளும் அநுராவுக்கு முக்கியமான தடைக் கற்களைக் கொண்ட நாட்களாக அமையக்கூடும். அந்தக் கற்களைப் படிக்கற்களாக மாற்றுவதற்கு அநுரா முயற்சி எடுத்தால் மாத்திரமே அநுராவால் நின்று நிலைக்க முடியும்.