புதினங்களின் சங்கமம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறுத்தப்படவுள்ள சலுகைகள் : அநுர வெளியிட்ட அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் (NPP)ஆட்சியில் பல தரப்பினருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஓய்வூதியம், இதர கொடுப்பனவுகள், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், இலவச குடியிருப்பு, மின்சார, நீர் கட்டணங்கள் உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகன தொடரணி செல்லுதல், விசேட பிரமுகர் பாதுகாப்பு, உள்ளிட்டவற்றையும் வழங்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறுத்தப்படவுள்ள சலுகைகள் : அநுர வெளியிட்ட அறிவிப்பு | All Concessions Will Stop In The Npp Regime Anura
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றபோதும், குற்றங்கள் குறைக்கின்றபோதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.