புதினங்களின் சங்கமம்

இன்றைய இராசிபலன்கள் (23.09.2024)

மேஷம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களிடம் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மதிப்பு உயரும் நாள்.

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்துவேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x