புதினங்களின் சங்கமம்

யாழ் இந்துக்கல்லுாரியில் நடக்கும் அலங்கோலம்!! ஆளுநர், கல்விஅதிகாரிகள் துாக்கம்!!

யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீட்டாடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சீட்டாட்டம் சூதாட்டமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ள இந்தச் சூழலிலும் குறித்த பாடசாலையில் புத்தக பைகள் பரிசோதிக்கப்படுகின்ற போதும் மாணவர்கள் சீட்டுக்கட்டுகளுடன் வகுப்புக்களில் விளையாடி வருகின்றனர். இது தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை எனத் தெரியவருகின்றது.

குறித்த சீட்டுக்கட்டுகள் பாடசாலைக்கு அருகில் உள்ள கடைகளில் தாரளமாக மாணவர்களுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் அக்கடைகளிலேயே மாணவர்ள் சீரழிவுக்கு காரணமான பல பொருட்கள் விற்கப்பட்டுவருதாகவும் அறிவருகின்றது. இது தொடர்பாக வடக்கு மாகண கல்வி அமைச்சோ அல்லது அல்லது மாகாண ஆளுநரோ எந்தவித அக்கறையும் செல்லுத்தாது உள்ளதாகவும் யாழ் இந்துக்கல்லுாரியின் கல்விச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.