மகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்..!! இது கதையல்ல நிஜம்…!
இந்தப் பதிவு உங்களை நிச்சயமாக சோகத்தில் ஆழ்த்தும் ஒரு பதிவாக இருக்கக்கூடும். மேலும், இந்த பதிவின் மூலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வயதான பெற்றோர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் உணர்த்தும்.ஒரு வயது முதிர்ந்த தாய், தனது அன்பு மகனுக்காக உணவு சமைத்து வைத்து விட்டு அவன் வருகைக்காக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனால், மகன் வரவே இல்லை. இந்த குறிப்பிட்ட வழக்கு உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அதுவும் நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வேலை செய்பவராக இருந்தால், உங்கள் குடும்பத்துடன் மிக குறைந்த அளவு நேரம் செலவிடுபவராக இருந்தால், நிச்சயம் இந்தப் பதிவு உங்களை பாதிக்கும்.தாயும் மகனும் :ஒரு பெண் தனது கணவனிடம் விவாகரத்து பெற்ற பிறகு தனி ஆளாக நின்று தன் மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். மகனும் நல்லபடியாக வளர்ந்து வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு சென்று விடுகிறான். அந்த தாய் அவள் வீட்டில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு வயது முதிர்ந்து விட்டது. இந்த இளம் வாலிபன் வார இறுதியில் தனது தாயைக் காண வந்து போகிறான்.நாட்கள் செல்லச் செல்ல, வேலைப் பளு அதிகரிப்பதன் காரணமாக தாயைக் காண வரும் அவன் பயணம் அவ்வப்போது தடைபடுகிறது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் வந்து சென்று கொண்டிருந்த மகன், தொடர்ந்து சில மாதங்கள் கூட வர முடியாமல் போகிறது. ஆனால், அந்தத் தாய் தன் மகனின் இந்த செய்கை குறித்து ஒரு போதும் குறை கூறாமல், அமைதியாக பொறுமையாக மகனின் வரவுக்காகக் காத்திருந்தாள்.மகிழ்ச்சியில் தாய் :அன்னையர் தினத்தன்று தனது தாயுடன் முழு நாளையும் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மகன் தன் தாயிடம் தெரிவித்தான். மேலும் ,அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைக்குமாறு தாயிடம் கூறி இருந்தான். இதனைக் கேட்டதும் அந்தத் தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகன் வருவதை நினைத்து, மிகவும் ஆனந்தமாக இருந்தாள். அன்னையர் தினத்தன்று காலை முதல் தனது மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.ஆசை, ஆசையாய் சமையல்: மகனுக்கு பிடித்தமான உணவு முழுவதும் சமைத்தவுடன், எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றாள். குளிக்கும்போது, அவளுக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு இதயம் செயலிழந்தது. வீட்டில் யாருமில்லாமல், தனியாக இருந்ததால் உயிருக்கு போராடி அவள் தோற்றுவிட்டாள்.
ஆம், அந்தத் தாய் இறந்து விட்டாள்.சில தினங்கள் கழித்து, பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் இந்த வீட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசுவதாக போலீசில் புகார் தெரிவித்தனர். போலிஸ் உடனடியாக வந்து இவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அந்தத் தாயின் உடல் முழுவதும் புழுக்களால் நிரம்பி இருந்தது. அந்தத் தாய் இறந்து கிடந்தாள். அவள் இறந்து நான்கு நாட்கள் ஆனது அப்போது தெரிய வந்தது. போலீசார் அவளின் மகனுக்கு அந்தத் தாயின் மரணம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
தாயின் மரணச் செய்தி அறிந்த மகன் துடிதுடித்துப் போனான். அன்னையர் தினத்தன்று தன் தாயைக் காண வரவிருந்ததாகவும், வேலை அதிகம் இருந்ததால் தற்போது வரை தான் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதாகவும், அவன் அப்போது தெரிவித்தான். உடனே அவன் தன்னுடைய வீடு வந்து சேர்ந்தான். டைனிங் டேபிளில் தனக்காக சமைத்து வைக்கப்பட்ட உணவு வகைகளைப் பார்த்தவுடன் தன் தாயின் அன்பை எண்ணி உடைந்து அழுதான். வயதான பெற்றோருடன் நேரம் செலவிடுவதை விட, எந்த ஒரு வேலையும் முக்கியமானது இல்லை என்பதை, இந்த உலகிற்கு உணர்த்த விரும்புவதாக அந்த மகன் கூறினான்.இந்தப் பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.