திருகோணமலையில் கைதானவரின் கிளிநொச்சி வீ்ட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு!!!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட்ட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதக்போது, ரி-56 ரக துப்பாக்கிகள்-3, பிஸ்டல்கள் -5, கைக்குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 150, பிஸ்டல் ரவைகள் 45, மடிக்கணினி ஒன்று, தொலைபேசிகள் -4, எம்.ரி.எம்.ரி ரக துப்பாக்கி ரவைகள் 7, டேட்டனேற்றர்கள் 45, ஜி.பி.எஸ்-1, டிஜிட்டல் கமெரா, சிறிய ரிமோட் வகைகள், குண்டுகளை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வயர்கள் உட்பட இன்னும் சில உபகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இராணுவ உபகரணங்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)