2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் பதிவான வாக்கு சதவீதம்!
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்து.
அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
இதன்படி, மாலை 4 மணி வரையில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
கொழும்பு – 75% – 80%
கம்பஹா – 80%
நுவரெலியா – 80%
இரத்தினபுரி – 75%
பதுளை – 73%
மொனராகலை – 77%
அம்பாறை – 70%
புத்தளம் – 78%
திருகோணமலை – 76%
கேகாலை – 75%
கிளிநொச்சி – 68%
குருநாகல் – 75%
பொலன்னறுவை – 78%
ஹம்பாந்தோட்டை – 78%
அனுராதபுரம் – 75%
மன்னார் – 72%
காலி – 74%
களுத்துறை – 75%
வவுனியா – 72%
மட்டக்களப்பு – 69%
பொலன்னறுவை – 78%
மாத்தளை – 74%
கண்டி – 78%
முல்லைத்தீவு – 68%
யாழ்ப்பாணம் – 65.9
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முடிவுகளை உடனுக்குடன் வழங்க தெரண ஊடக வலையமைப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தெற்காசியவிலேயே மிகப்பெரிய செய்தி அறையில் இருந்து அதி நவீன தொழிநுட்பத்துடன் மற்றும் கிராஃபிக் அனிமேஷன் கருவிகளை பயன்படுத்தி வௌிநாட்டு நிபுணர்கள் குழுக்களின் தொழில்நுட்ப உதவியுடன் சர்வதேச தரத்திலான தொலைக்காட்சி அனுபவத்தை இந்நாட்டு பார்வையாளர்களுக்கு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தெரண வானொலி, தெரண ரிவி மற்றும் தெரண இணையத்தளம் ஊடாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க அத தெரண செய்திப்பிரிவு தயாராக உள்ளது.
ஆதேபோல், அத தெரண குறுந்தகவல் ஊடாக கைப்பேசிகளுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஊடாகவும் தேர்தல் முடிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.