எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை!
எதிர்வரும் திங்கள்கிழமை (23)யை விசேட அரச விடுமுறையாக அரசு பிரகடனப்படுதியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (21) அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன வெளியிட்ட ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.