புதினங்களின் சங்கமம்

யாழில் மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு.!! Video

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது. இந்நிலையில் தனது 18வயதை தாண்டிய பைசா நேற்றையதினம் (2024.09.14) உயிரிழந்தது.

இறுதிச் சடங்கினை செய்தவர் கடந்த 10 வருடங்களாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இன்றையதினம் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.

பான்ட் வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் பைசாவின் எசமானின் காணியில் உடலமானது நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x