புதினங்களின் சங்கமம்

யாழ்ப் சாவகச்சேரியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரி நகர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி மிதிவண்டியில் பயணித்த முதியவர் ஒருவரை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வீதியோரத்தில் தரித்திருந்த வாகனம் ஒன்றை முதியவர் கடந்து செல்ல முற்பட்டபோதே எதிரே வந்த வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சாவகச்சேரியைச் சேர்ந்த நடராசா பொன்னுச்சாமி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.