யாழ் சரசாலைக் காட்டுப் பகுதியில் இரு யுவதிகளுடன் பிடிபட்ட பிரான்ஸ் அங்கிள்!!
யாழ் சரசாலை குருவிக்காட்டுப் பகுதியில் சொகுசு கார் ஒன்றில் வந்த இரு யுவதிகளும் 50 வயதான பிரான்ஸ் வாழ் தமிழ் குடும்பஸ்தரும் அரைகுறை ஆடைகளுடன் பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு அண்மையில் உள்ள கோவில் ஒன்றிற்கும், பறவைகளைப் பார்ப்பதற்காகவும் தாங்கள் வந்ததாக பிடிபட்ட குடும்பஸ்தரும் யுவதிகளும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். யுவதிகள் இருவரும் வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறித்த குடும்பஸ்தர் தென்மராட்சிப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பிரான்ஸ் நாட்டிலிருந்து அவர் வந்துள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூலம் தெரியவருகின்றது. அவர்கள் வந்த காருக்குள் பியர் ரின்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளும் காணப்பட்டுள்ளது. குறித்த 3 பேரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பபட்டுள்ளனர்.