கனடாவிலிருந்து சுற்றுலாவிற்காக மலேசியா சென்ற சுதன் மாயம்!! பெண்ணுடன் தொடர்பு!! மனைவி தேடுதல்!!
கனடாவிலிருந்து மலேசியாவுக்கு தனியே சுற்றுலா சென்ற தர்மரட்ணம் சுதன் என்பவர் மாயமாகி விட்டதாக மனைவி மலேசியா சென்று பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். கடந்த மாத தொடக்கத்தில் சுதன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். சென்று ஒரு கிழமை வரை மனைவி, பிள்ளைகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது பேஸ்புக் மற்றும் வட்சப் போன்றவற்றின் தொடர்புகளும் செயற்படவில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மனைவி இது தொடர்பாக மலேசியாவில் உள்ள கணவரது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது சுதன் மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு சென்றுவிட்டார் எனவும் அதிலிருந்து தம்முடனும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே வேளை சுதனுடன் இலங்கையிலிருந்து வந்த ஒரு தமிழ் யுவதி சேர்ந்து திரிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதனையடுத்து மலேசியா சென்ற மனைவி சுதன் காணாமல் போனமை தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

